அவரது பொது நிகழ்ச்சிகள்

அவரது பொது நிகழ்ச்சிகள்

ஒரு உலகளாவிய பயணம்

1970 ஆம் ஆண்டு சஹஜ யோகாவின் நுட்பத்தை அவர் அறிமுகப்படுத்திய காலத்திலிருந்து, ஸ்ரீ மாதாஜி தொடர்ந்து பயணம் செய்தார்: பொது நிகழ்ச்சிகளை வழங்குதல், ஊடகங்களுக்கு நேர்காணல் செய்தல், சர்வதேச மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளில் பேசுதல், அரசு சாரா நிறுவனங்களை நிறுவுதல் மற்றும் "உலகளாவிய குடும்பம்" என்று அவர் கருதிய மக்களுடன் நேரத்தை செலவிடுதல் போன்றவற்றில் ஈடுபட்டார்.

அவரது வருகைக்கு எந்த இடத்தையும் சிறியதானதாகவோ அல்லது தொலைவில் உள்ளது என்றோ அவர் கருதியதில்லை.
இமயமலையின் அடிவாரத்திலிருந்து ஆஸ்திரேலியாவின் வெளிப்பகுதி வரை; லண்டனில் இருந்து இஸ்தான்புல் முதல் லாஸ் ஏஞ்சல்ஸ் வரை, ஸ்ரீ மாதாஜி தனது நேரத்தை ஆத்ம விழிப்புணர்வு அனுபவத்தை விரும்பும் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள அர்ப்பணித்தார்.
1970 களின் முற்பகுதியில் இருந்து 1980கள் முழுவதும் ஸ்ரீ மாதாஜி ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் வட அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு தொடர்ந்து மற்றும் அயராது சுற்றுப்பயணம் செய்தார்.
1990 களில் அவரது பயணங்கள் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ரஷ்யா, கிழக்கு ஐரோப்பா, ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளுக்கு பரவியது.
1990 ஆம் ஆண்டு ஸ்ரீ மாதாஜியின்பயணத்திட்டத்தைப் பார்க்கும் பொழுது, அவர் வழக்கமாகப் பராமரித்த அட்டவணையின் வகையை வெளிப்படுத்துகிறது : அதில் பிரேசில், இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து, போலந்து, ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட இருபத்தி ஆறு நாடுகளில் இருநூறுக்கும் மேற்பட்ட நிகழ்வுகள் இருந்தது.
அந்த ஆண்டில் அவர் பயணித்த தூரம் 135,000 கிலோமீட்டரைத் தாண்டியது, இது பூகோளத்தை மூன்று முறை சுற்றி வருவதற்குச் சமம்.

நம்பமுடியாத அளவுக்கு அவர் பயணங்களை மேற்கொண்டார் .
40 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் சஹஜ யோகாவைக் கற்பித்தார் மற்றும் நிறுவினார் - இது அவரது தீராத ஆற்றல் மற்றும் எல்லா இடங்களிலும் ஆன்மீக மாற்றம் ஏற்படுத்துவத்திற்கான முழுமையான அர்ப்பணிப்புக்கான சான்றாகும்.

1970 மற்றும் 2011 க்கு இடையில் ஸ்ரீ மாதாஜியுடன் பல்வேறு பொது நிகழ்ச்சிகள், ஊடக நேர்காணல்கள், மாநாடுகள், பயிலரங்குகள் மற்றும் கருத்தரங்குகளின் ஆடியோ-வீடியோ இணைப்புகளை கீழே உள்ள ஊடாடும் வரைபடம் ஆவணப்படுத்துகிறது.
குறிப்பான் அல்லது குறிப்பான்களின் குழுவைக் கிளிக் செய்வதன் மூலம், அந்த இடத்தில் பதிவுசெய்யப்பட்ட நிரல்களுக்கான ஆடியோ-வீடியோ இணைப்புகள் உட்பட கூடுதல் தகவலைப் பெறுவீர்கள்.