உச்சகட்டம்

உச்சகட்டம்

ஒரு பணிவான வணக்கம்

மனிதகுலத்தின் ஆன்மீக பரிணாமத்திற்கு பங்களிப்பதே தனது இறுதி இலக்கு என்பதை ஸ்ரீ மாதாஜி சிறு வயதிலிருந்தே அறிந்திருந்தார்.
இருப்பினும், அவருக்கு 47 வயதாகி, அவரது இரண்டு மகள்கள் திருமணம் செய்து கொண்ட பின் தான் ஸ்ரீ மாதாஜி தனது வாழ்க்கையை வரையறுக்கும் பணியைத் துவங்கினார்.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள நார்கோல் என்ற சிறிய கிராமத்தில் தான் திருப்புமுனை ஏற்பட்டது.
மே 5, 1970 அன்று, ஆழ்ந்த தியானத்திற்குப் பிறகு, ஸ்ரீ மாதாஜி அடுத்த நாற்பது ஆண்டுகளுக்கு அவரது செயல்களை ஊக்குவிக்கும் உணர்வு மற்றும் உண்மையின் ஆழமான அனுபவத்தைப் பெற்றார்.

shri-mataji-nirmala-devi-teaching-sahaja-yoga-meditation-in-india

அந்த தருணத்திலிருந்து, ஸ்ரீ மாதாஜி, சஹஜ யோகா என்று அழைக்கப்படும் ஒரு எளிய தியான முறையின் மூலம், ஆத்ம விழிப்புணர்வு ஒவ்வொரு நபருக்கும் எட்டக்கூடியது என்ற செய்தியைப் பரப்புவதற்கு தன்னை அர்ப்பணித்தார்.
சஹஜ யோகா என்பது ஒரு சமஸ்கிருத சொல். தனிநபர் எங்கும் நிறைந்திருக்கும் படைப்பு சக்தியுடன் 'தன்னிச்சையான ஒன்றியம்' ஆகுதல் என்பது அதன் பொருள்.
ஆத்ம விழிப்புணர்வு அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கும் என்று கூறியதுடன், ஒரு மெழுகுவர்த்தி மற்றொன்றை ஏற்றி வைப்பது போல அந்த அனுபவத்தை மற்றவர்களுக்கு எப்படி பகிர்ந்துக் கொள்வது என்பதையும் காட்டினார்.

ஸ்ரீ மாதாஜி மும்பையிலும் லண்டனிலும் ஒரு சில தீவிர ‘சாதகர்களுடன்’ சிறிய அளவில் தொடங்கினார்.
இந்த காலகட்டத்தில் 1980-களின் நடுப்பகுதி வரை, ஸ்ரீ மாதாஜி உடன் இருந்து தாய்வழி பிரசன்னமாக இருந்தார் - சமைப்பது, சாப்பிடுவது, ஷாப்பிங் செய்வது, சினிமாவுக்குச் செல்வது போன்றவற்றுடன் வளர்ந்து வரும் அவரது ஆன்மீகக் குடும்பத்துடன் தொடர்ந்து தியானமும் செய்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச கடல்சார் அமைப்பின் பொதுச்செயலாளரான அவரது கணவர் சர் சி.பி. ஸ்ரீவஸ்தவா, முதலில் தனது மனைவியின் ‘திறந்த கதவு’ கொள்கையால் சற்று அதிர்ச்சியடைந்தார், ஆனால் நாளடைவில் அவரும் அவரது இரக்கம் மற்றும் பிறருக்கு உதவும் விருப்பத்தைக் கண்டு ஈர்க்கப்பட்டார்.
அவர் தனது மனைவி தனிப்பட்ட நபர்களை தங்கள் வீட்டிற்கு வரவேற்று, ஆத்ம விழிப்புணர்வு கொடுத்து அவர்களுக்கு சஹஜ யோகா நுட்பங்களைப் பயன்படுத்தி தங்களைத் தாங்களே குணப்படுத்திக் கொள்ளக் கற்றுக் கொடுப்பதையும், அவர்களைக் கவனித்துக் கொள்வதையும் பார்த்தார்.
அத்தகைய ஒரு சம்பவத்தைப் பற்றி அவர் கூறினார், “பின்னர் நான் அதிசயம் நடப்பதைக் காண ஆரம்பித்தேன்.
அவள் அந்த இளைஞனை மிகுந்த அக்கறையுடனும் பாசத்துடனும் சஹஜ யோகத்துடன் நடத்தினாள், மேலும் சிறுவன் மாறத் தொடங்கினான்…”

ஸ்ரீ மாதாஜி ஏற்கனவே ஒரு முன்னணி தூதரின் மனைவியாக உயர்ந்த இடத்தைப் பெற்றிருந்தாலும், அவர் தனது சொந்த உரிமையில் பொது வாழ்க்கையில் ஒருப் பாத்திரத்தை வகிக்கத் தொடங்கினார் - பொது நிகழ்வுகளில் பேசுதல், பத்திரிகை நேர்காணல்கள் வழங்குதல், விரிவுரைகள் வழங்குதல் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, நாடி வரும் அனைவருக்கும் ஆத்ம விழிப்புணர்வு அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் எங்கு சென்றாலும் உண்மைச் செய்தியாலும், தீராத ஆற்றலாலும், அற்புதமான நகைச்சுவை உணர்வாலும் மக்களைக் கவர்ந்தார்.
மெதுவாக ஆனால் நிச்சயமாக, சஹஜ யோகா பயிற்சி இங்கிலாந்து மற்றும் இந்தியாவிலும், பின்னர் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் இறுதியில் உலகின் பிற பகுதிகளிலும் நிறுவப்பட்டது.

1990 களில், ஸ்ரீ மாதாஜி ஒரு உலகளாவிய ஆளுமையாக மாறினார், அவர் எங்கு சென்றாலும், தொடர்ச்சியான அஞ்சலிகள் மற்றும் விருதுகளுடன் ஊடக கவனத்தை ஈர்த்தார்.
அவர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார், மேலும் ஆல்ஃபிரட் நோபலின் பேரனும், யுனைடெட் எர்த் அறக்கட்டளையின் தலைவருமான கிளேஸ் நோபல், "நமது சொந்த விதியின் எஜமானர்களாக ஆவதற்கு ஸ்ரீ மாதாஜி எங்களுக்கு அதிகாரம் அளிக்கிறார்" என்று அறிவித்தார்.
நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகம் மற்றும் பெய்ஜிங்கில் நடந்த ஐ.நா. பெண்களுக்கான மாநாட்டில் பேசுவதற்கு அவர் அழைக்கப்பட்டார்.
எண்ணற்ற நகரங்கள் மற்றும் பிராந்திய அரசாங்கங்கள் அவரது நினைவாக ஒரு நாளை நிறுவின.

ஸ்ரீ மாதாஜி, மும்பைக்கு அருகிலுள்ள சர்வதேச மருத்துவமனை மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் மற்றும் புது தில்லியின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஆதரவற்ற பெண்களுக்கான இல்லமான நிர்மல் பிரேம் உட்பட பல அரசு சாரா நிறுவனங்களை நிறுவினார்.
இன்று வரை, இந்த அடித்தளங்கள் மக்கள் நோய் மற்றும் அடிமையாதல் போன்ற பிரச்சனைகளை சமாளிக்கவும், அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் அர்த்தத்தை கண்டறியவும் சஹஜ யோகா நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன.

ஒரு பிரபலமானவராக மாறினாலும், ஸ்ரீ மாதாஜி எப்போதும் இரக்கமுள்ள, கனிவான மற்றும் பணிவான ஆளுமையாக இருந்தார். அவருடைய நோக்கமும் மாறவில்லை, அவருடைய செய்தியும் மாறவில்லை.
அவர் தனது புத்தகமான 'மெட்டா மாடர்ன் இரா'வில் இவ்வாறு எழுதியுள்ளார், "தெய்வீக அன்பின் எங்கும் நிறை ஆனந்தம் உள்ளது, அதை அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்." [1]

 

ஸ்ரீ மாதாஜி தனது வாழ்நாளின் இறுதி வரை தொடர்ந்து உலகம் முழுவதும் பயணம் செய்தார், இருப்பினும் அவர் தனது நெருங்கிய குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட்டதால், பிற்காலத்தில் அவரது பொது தோற்றம் குறைந்துவிட்டது.

பிப்ரவரி இருபத்தி மூன்றாம் தேதி, 2011 இல், ஸ்ரீ மாதாஜி தனது 87வது வயதில் காலமானார். ஆத்ம விழிப்புணர்வு அனுபவம் எண்ணற்ற உயிர்களை மாற்றியமைப்பதால், அவரது மரபு நிலைத்திருக்கிறது.


Nirmal Dham, Delhi, India
Nirmal Dham, Delhi, India
Nirmal Dham, Delhi, India
Nirmal Dham, Delhi, India

நாம் அனைவரும் ஒரு பொதுவான வாழ்க்கைக் கோட்பாட்டிற்குக் கட்டுப்பட்டிருக்கிறோம் என்பதை ஒருவர் உணர வேண்டும்... நம் அனைவருக்குள்ளும் குண்டலினி இருக்கிறது... எல்லா மக்களையும், எல்லா மனிதர்களையும் அவர்கள் எந்த தேசத்திலிருந்து வந்தாலும், எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த நிறத்தவராக இருந்தாலும் அவர்களை மதிக்க வேண்டும் ஏனெனில் அவர்கள் அனைவருக்கும் குண்டலினி உள்ளது.


1. ↑ ஸ்ரீ மாதாஜி நிர்மலா தேவி, ‘மெட்டா மாடர்ன் எரா’ புனே: விஸ்வ நிர்மலா தர்மா, 1995.