நுட்பமான மையங்களை (சக்கரங்களை) ஒருவர் உடலில் அல்லது கைகள் மற்றும் கால்களில் உள்ள விரல் நுனிகளில் உண்மையில் எப்படி உணர முடியும் என்பதை ஸ்ரீ மாதாஜி தேடுபவர்களுக்கு விளக்கினார்.
நமது மனித ஆன்மாவின் நிலையைப் பொறுத்து, சூடாகவோ, குளுமையாகவோ, உடல் கூச்சமாகவோ அல்லது பாரமாகவோ ஒருவர் வெவ்வேறு உணர்வுகளை உணர முடியும்.
உடல்சார்ந்த, மனம் சார்ந்த, உணர்ச்சிவயப்பட்ட மற்றும் ஆன்மீகம் சார்ந்த நிலைகளில் அவர்களைப் பாதிக்கும் ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்கு அவர் முன்னிலையில் தேடுபவர்கள் அனுபவித்த இந்த உணர்வுகள் ஒவ்வொன்றையும் அவர் பொறுமையாக குறிவிலக்கம் செய்தார்.
இந்த யோக ஆன்மீக அனுபவம், உலகின் பல்வேறு வேதங்களில், குறிப்பாக புனித குரானின் வசனங்களில் மிகவும் சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
உங்கள் விரல் நுனியில் உங்கள் மையங்களை நீங்கள் உணர முடியும், மற்றவர்களின் மையங்களையும் நீங்கள் உணர முடியும் என்பது இதுதான்.
எனவே, நீங்கள் சுய அறிவை வளர்த்துக் கொள்கிறீர்கள், மேலும் நீங்கள் கூட்டு உணர்வுள்ளவராகவும் ஆகிறீர்கள்.
ஒருவர் சக்கரங்களை நாக்குகளின் வடிவில் உள்ள சுடரின் கற்றையாகவோ அல்லது தாமரை இதழ்களாகவோ காட்சிப்படுத்தலாம்.
ஒவ்வொரு சக்கரமும் நரம்பு பின்னல்களுக்குள் உள்ள துணை-பின்னல்களின் எண்ணிக்கையுடன் தொடர்புடைய வெவ்வேறு எண்ணிக்கையிலான இதழ்களைக் கொண்டுள்ளது.
நரம்பு பின்னல்கள் நமது உடலிலும் மூளையிலும் உள்ள தகவல்களின் ஓட்டத்தை ஒழுங்குபடுத்துகின்றன, இது நமது இருப்பின் இணக்கமான செயல்பாட்டை எளிதாக்குகிறது. அவைதான் நமது உடல், மன மற்றும் உணர்ச்சிச் செயல்பாடுகள் அனைத்திற்கும் அடிப்படை.
இவ்வாறு, ஒவ்வொரு சக்கரமும் சில உடல், மன மற்றும் உணர்ச்சிப் பண்புகளுடன் தொடர்புடையது.
நாம் மன, உணர்ச்சி அல்லது உடல் மட்டத்தில் கோளாறுகளை அனுபவிக்கும் போது அதற்கு இந்த சக்கரங்களில் ஒரு நுட்பமான அடைப்போ அல்லது தடைகளோ காரணமாகும்.
இந்த நுட்பமான ஆற்றலின் மொத்த வெளிப்பாடு, முதுகுத் தண்டின் சுஷும்னா நாடியில், அண்ண சிறு (பாராசிம்பேடிக்) நரம்பு மண்டலம் என்று அழைக்கப்படுகிறது.
சக்கரங்களின் மையங்கள் முதுகெலும்புக்கு வெளியே பின்னல்களாக வெளிப்படுத்தப்படுகின்றன.
ஆச்சரியம் என்னவென்றால், நமக்கு வெளியே இருக்கும் பின்னல்கள் மற்றும் துணை பின்னல்களின் எண்ணிக்கை முதுகுத்தண்டு வடத்தில் உள்ளே இருக்கும் சக்கரங்கள் மற்றும் அவற்றின் இதழ்களின் எண்ணிக்கையை ஒத்தி இருக்கிறது.
நமது நரம்பு மண்டலத்தின் புற விரிவாக்கம் நமது நுட்பமான உடலின் புற நீட்டிப்புடன் ஒத்துப்போகிறது, இது முதுகுத் தண்டு வடத்தில் உள்ள சக்கரங்களுக்கும் நமது கைகள் மற்றும் கால்களில் உள்ள உறுப்புகளுக்கும் இடையே ஒரு தொடர்பை ஏற்படுத்துகிறது.
நமது உடலில் உள்ள இந்த இடங்களின் சரியான குறிவிலக்கம் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நுட்பமான மையங்களை (சக்கரங்கள்) ஒருவர் அறிந்தால், ஒருவர் தனது உடல், மன, உணர்ச்சி மற்றும் ஆன்மீக இருப்பில் எளிதில் தேர்ச்சி பெற முடியும்.
முழுமையான உலகளாவிய யதார்த்தத்திலிருந்து ஒருவர் இனி பிரிக்கப்படுவதில்லை, ஆனால் சுய அறிவின் மூலம் உணரப்பட்ட உண்மைகளின் மாயைகளிலிருந்து தன்னைப் பிரிக்க முடியும்.
நமது நுட்பமான அமைப்பில் உள்ள மையங்கள் நமது உடல், மன மற்றும் உணர்ச்சி நல்வாழ்வை ஒழுங்குபடுத்துவது மட்டுமல்லாமல், நமது ஆளுமையை வடிவமைக்கவும் உதவுகின்றன.
நமது ஆளுமைப் பண்புகளின் களஞ்சியமாக அவற்றை ஒருவர் புரிந்து கொள்ளலாம். நாம் பரிணமித்து, முதிர்ச்சியடைந்து, வளரும்போது இந்த ஆளுமைப் பண்புகள் நம் வாழ்வில் சில சமயங்களி அறிந்தும், பெரும்பாலும் அறியாமலும் வெளிப்படுகின்றன.
ஒருவருக்கு உதவ அல்லது கொடுக்கப்பட்ட சூழ்நிலையில் அன்பாக அல்லது தாராளமாக இருக்க வேண்டும் என்ற உந்துதலை நீங்கள் எவ்வளவு அடிக்கடி பெற்றிருக்கிறீர்கள் என்று சிந்தியுங்கள்.
இந்த உணர்வுகள் எங்கிருந்து வருகின்றன? சீனாவிலும் இந்தியாவிலும் உள்ள பண்டைய கிழக்கு கலாச்சாரங்கள், நுட்பமான அமைப்பின் அறிவைப் பயன்படுத்தி வாழ்ந்தன, அவர்களின் சமூகங்கள் ஆன்மீக வாழ்க்கையின் உயர்ந்த மதிப்புகள், தர்மத்தின் அடிப்படையில் அமைந்தன.
பண்டைய சமஸ்கிருத மொழியில் தர்மம் என்றால் 'நீதியான நடத்தை நெறிமுறை', இது முழுதாளவிய ஆத்மாவிற்கு இணக்கமாக உள்ள ஒன்றாகும்.
மோசஸிற்கு கொடுக்கப்பட்ட பத்துக் கட்டளைகளுக்கு இணையான ஒப்புமையைக் காணலாம்.
உண்மையில், பண்டைய உலக மதங்கள், கலாச்சாரங்கள் மற்றும் மரபுகள் பலவற்றில் இந்த உலகளாவிய உள் நடத்தை நெறிமுறையின் பிற எடுத்துக்காட்டுகளைக் காணலாம்.
ஸ்ரீ மாதாஜி பகிர்ந்து கொண்ட அறிவின் அடிப்படையில், பின்வரும் பிரிவுகள் ஒவ்வொரு சக்கரத்தையும் விவரிக்கின்றன மற்றும் நுட்பமான மையங்களின் பழமையான கொள்கையின் அடிப்படையில் உள்ளார்ந்த ஆளுமைப் பண்புகளை எடுத்துக்காட்டுகின்றன.
இந்த மையங்களின் சில குணங்கள் நாம் பிறந்த நேரத்திலிருந்து நமது மனித விழிப்புணர்வில் வெளிப்படுகின்றன.
இந்த மையங்களின் உயர்ந்த நுட்பமான குணங்கள் குண்டலினியின் விழிப்புணர்வின் மூலம் நமது ஆத்ம விழ்ப்புணர்விற்குப் பிறகு முழுமையாக வெளிப்படுகின்றன.
வெவ்வேறு மையங்களைப் பற்றிய இந்த நுட்பமான அறிவைப் பயன்படுத்துவதன் மூலம், நமது உள்ளார்ந்த ஆன்மீக இயல்பு மற்றும் நமது சக மனிதர்களுடன் இணக்கமாக வாழ உதவுகிறது.