கலாச்சார ஒருங்கிணைப்பு

கலாச்சார ஒருங்கிணைப்பு

நிலையான நாகரிகத்தை நோக்கி

கருத்தரங்குகள், செய்தியாளர் சந்திப்புகள் மற்றும் முறைசாரா சொற்பொழிவுகளில், வரலாறு முழுவதும் தீர்க்கதரிசிகள் மற்றும் புனிதர்கள் அனைவரும் ஒருவரின் சுயத்தை, ஒருவரின் ஆத்மாவை அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தைப் பற்றி பேசினர் என்று ஸ்ரீ மாதாஜி அடிக்கடி கூறுவார்.
“நாம் செய்ய வேண்டியது இதுதான். நமது ஆத்மாவின் மதத்தை மேம்படுத்துவதே ஆகும்” என்று அவர் கூறினார்.
அவர் மதங்களின் வளர்ச்சியை பல பூக்கள் கொண்ட ஒரு பெரிய மரத்திற்கு ஒப்பிட்டார்.
அறியாமையால், மக்கள் பூக்களை பறித்து, ஒருவருக்கொருவர் சண்டையிட பயன்படுத்துகின்றனர், இந்த மலர்கள் ஒரே மரத்தில் இருந்து வந்தவை என்பதை மறந்துவிடுகின்றனர்.

ஆகவே, எல்லா மக்களையும், எல்லா மனிதர்களையும், அவர்கள் எந்த நாட்டிலிருந்து வந்தாலும், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் எந்த நிறத்தில் இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் அவர்களின் குண்டலினி இருப்பதால் நாம் மதிக்க வேண்டும்.

ஒரு பொது நிகழ்ச்சியின் போது, ​​அக்கறையுள்ள நேயர் ஒருவர் ஸ்ரீ மாதாஜியிடம், "அம்மா, உங்கள் செய்தியை மற்றவர்கள் எப்படி புரிந்துகொள்வார்கள்?" என்று கேட்டார்.
ஸ்ரீ மாதாஜி புன்னகைத்தார், "அனைவரும் அன்பைப் புரிந்துகொள்கிறார்கள், இல்லையா?" சஹஜ யோகா தியானத்தின் மூலம், பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த தனிநபர்களிடையே ஒருங்கிணைப்பை அடைவதற்கான ஒரு முறையை அவர் வெளிப்படுத்தினார்: அது விழிப்புணர்வு நிலையாகும், மனம் முற்றிலும் அமைதியாக இருக்கும்போது, ​​கூட்டு உணர்வு எனப்படும் ஒருங்கிணைக்கும் சக்தியாக மாறும்.

ஸ்ரீ மாதாஜி 1993 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள நிஜாமுதீன் ஆலயத்திற்கு வருகை தந்தார்
ஸ்ரீ மாதாஜி 1993 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள நிஜாமுதீன் ஆலயத்திற்கு வருகை தந்தார்

கார்ல் ஜங் இந்த வழியில் கூட்டு உணர்வை விவரித்தார்: "முழுமையான தனிப்பட்ட இயல்புடையது மற்றும் ஒரே அனுபவத்தால் அறியப்படுகிற ஆத்மா என்று நாம் நம்பும் நமது உடனடி உணர்வுக்கு கூடுதலாக, ஒரு கூட்டு, உலகளாவிய மற்றும் ஆள்மாறான இயல்புடைய இரண்டாவது மனநல அமைப்பு எல்லா தனி நபரிடமும் ஒரே மாதிரியாக உள்ளது.
சஹஜ யோகா தியானம் ஒருவரின் விழிப்புணர்வை ஆழமான அளவில், தன்னாட்சி நரம்பு மண்டலத்தின் வேர்களில் செயல்படுத்துகிறது. மனதின் கவனத்தை சிதறடிக்கும் உரையாடல்கள் மற்றும் நீண்ட காலமாக இருக்கும் நிபந்தனைகள் அமைதி படுத்தப்பட்ட நிலையில், கலாச்சார வேறுபாடுகள் மேலோட்டமான மட்டத்தில் நிகழ்கின்றன என்பதை ஒருவர் அடையாளம் காண முடியும். "உலகளாவிய மற்றும் ஆள்மாறான இயல்பு" என்பது ஒன்றே ஆகும்.

நாம் அனைவரும் சில பொதுவான வாழ்க்கைக் கோட்பாட்டிற்குக் கட்டுப்பட்டுள்ளோம் என்பதை நாம் உணர வேண்டும், என்று ஸ்ரீ மாதாஜி விளக்கினார், "நம் அனைவருக்கும் நமது குண்டலினி உள்ளது.
எனவே நாம் அனைத்து மக்களையும், அனைத்து மனிதர்களையும் மதிக்க வேண்டும்.
அவர்கள் எந்த நாட்டிலிருந்து வந்தாலும், எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த நிறத்தில் இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் அவர்களின் குண்டலினி உள்ளது.

ஸ்ரீ மாதாஜி தனது பயணங்களின் போது, ​​ஒவ்வொரு நாட்டின் கலை மற்றும் கைவினைப் பொருட்களில் மிகுந்த ஆர்வம் காட்டுவார், அவை ஆத்மாவின் கலாச்சாரத்தை எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்பதைக் கவனிப்பார்.
"இந்த கலாச்சாரத்தில், நாங்கள் அது விலை உயர்ந்தது அல்லது அது மிகவும் பகட்டானது, ஆடம்பரமானது அல்லது அது விளம்பரத்துடன் உள்ளது என்ற எதற்கும் அடிபணிய மாட்டோம்," என்று அவர் கூறிவார். "
இந்த கலாச்சாரத்தில் நாங்கள் பார்ப்பது அது எவ்வளவு தூரம் மகிழ்ச்சியைத் தருகிறது என்பதே ஆகும்".

பல ஆண்டுகளாக, ஸ்ரீ மாதாஜி பல்வேறு நாடுகள், பின்னணிகள் மற்றும் மதங்களைச் சேர்ந்த கலைஞர்களை கலாச்சார விழாக்களில் நிகழ்ச்சிகள் நடத்த அழைத்தார்.
இந்தக் கலைகளைப் பற்றி அறியாதவர்களின் நலனுக்காக, ஒரு கவாலி, ஒரு ராகம், ஒரு விவால்டி, ஒரு கச்சேரி அல்லது ஒரு பாரம்பரிய இந்திய நடனம் ஆகியவற்றின் அர்த்தத்தை அவர் விளக்குவார்.
கலைஞர்களின் வாழ்வாதாரத்தை ஆதரிப்பதற்கும், கலை மரபுகளை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கும் மட்டுமல்லாமல், பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பின்னணியில் இருந்து வந்த கலை மற்றும் இசை உலகளாவியதாகவும் மற்றும் உலகளவில் ரசிக்கத்தக்க கலாச்சாரத்தை வெளிப்படுத்த முடியும் என்பதைக் காட்டவும் அவர் இந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார், அதுதான் ஆத்மாவின் கலாச்சாரம்.


1. ↑ சி.ஜி. ஜங், 'ஆர்க்கிடைப்ஸ் அண்ட் தி கலெக்டிவ் அன்கான்சியஸ்,' இன் கலெக்டிவ் ஒர்க்ஸ் ஆஃப் சி.ஜி. ஜங், தொகுதி. 9, பகுதி 1, லண்டன், 1969.