தியானம் செய்வது எப்படி

தியானம் செய்வது எப்படி

தினசரி வழக்கத்தை நிறுவுதல்

சஹஜ யோகாவில் நீங்கள் தியானம் செய்ய வேண்டியதில்லை.
நீங்கள் தியானத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் தியான நிலையில் இருக்கிறீர்கள்.

உங்கள் குண்டலினியின் விழிப்புணர்வின் மூலம் உங்கள் ஆத்ம விழிப்புணர்வை நீங்கள் பெற்றவுடன், சூரியன் மற்றும் நீரைப் பயன்படுத்தி ஒரு முளைவிடும் விதையை வளர்ப்பது போல, இந்த அனுபவத்தை வளர்த்து அதை ஆழப்படுத்த வேண்டும்.
இதைச் செய்வதற்கான மிக முக்கியமான ஒரே வழி, தவறாமல் தியானம் செய்வதாகும்.
தியானம் என்பது ஒரு செயல் என்று சொல்வதைவிட, அது ஒரு நிலை என்று கூற வேண்டும்.
ஆனால் அந்த தியான நிலையை ஆழமாக்குவதற்கு உகந்த ஒரு அமைப்பையும் ஒரு வழக்கத்தையும் நிறுவ சில எளிய வழிமுறைகள் உள்ளன.

முதலில், நீங்கள் வசதியாக இருக்கவும் மற்றும் எந்த தொந்தரவும் இல்லாத ஒரு இடத்தைக் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் தரையிலோ நாற்காலியிலோ உட்காரலாம், உங்களுக்கு எது எளிதோ அவ்வாறு அமரவும்.
உள்ளங்கைகளை மேல்நோக்கி உங்கள் மடியில் வைக்கவும்.
அமைதியாக, நிதானமாக கவனத்தை உள்நோக்கி கொண்டு வாருங்கள், உங்களுக்குள் என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்க முயற்சிக்கவும். உங்கள் எண்ணங்களைக் கவனித்து அவற்றை மெதுவாக்குங்கள்.
உங்கள் ஆத்ம விழிப்புணர்வை நீங்கள் முதல் முறை அனுபவித்த அமைதி மற்றும் ஆனந்த நிலையை அடைய விருப்பம் கொள்ளுங்கள்.
விருப்பம் என்பது சஹஜ யோகா தியானத்தின் முதல் நுட்பமாகும், மேலும் ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்கள் கவனத்தை உள்நோக்கி கொண்டு செல்லும் போது உங்கள் தியான நிலையில் ஒரு படி ஆழமாக உங்களை கொண்டு வரும்.

இரண்டாவது நுட்பம், நீங்கள் அமைதியான நிலையை அடைந்தவுடன், உங்கள் கவனத்தை உங்கள் தலை உச்சிக்கு மெதுவாகக் கொண்டுவருவது.
இது தான் சஹஸ்ரார சக்கரம் ஆகும், அங்கு குண்டலினி லிம்பிக் பகுதியை அறிவூட்டிய பிறகு தலையிலிருந்து வெளியேறுகிறது.
இது நமது சிந்தனை செயல்முறைக்கு அப்பால் சென்று நாம் கூட்டு விழிப்புணர்வுடன் இணைக்கப்பட்டுள்ள பகுதி ஆகும்.
உங்கள் உள்ளங்கையின் மையப்பகுதியை உங்கள் உச்சிக்குழி எலும்புப் பகுதியில் வைத்து, விரல்களை பின்னுக்குத் தள்ளி, சிறிது அழுத்தம் கொடுத்து சுழற்றும் .
இது உங்கள் ஆத்ம விழிப்புணர்வைப் பெற முதலில் செய்த பயிற்சியின் போது நீங்கள் செய்த கடைசி படியைப் போன்றது. இது கவனத்தை கடைசி சக்கரத்தில் கொண்டு வந்து இணைப்பை ஏற்படுத்த உதவுகிறது.

இப்போது தியான நிலைக்குள் செல்ல சிறிது நேரம் கொடுங்கள். உங்களை நீங்கள் கவனியுங்கள் - குண்டலினியின் அசைவுகளை, உங்கள் கவனத்தின் ஆழத்தை, எண்ணங்கள் குறைந்து அமைதி அனந்த உணர்வு வருவதை கவனியுங்கள்.
தியானம் ஒரு வாழ்க்கை செயல்முறை என்பதால், அதன் சொந்த வழியில் செல்லும் மற்றும் உங்களைப் பற்றிய புதிய மற்றும் அழகான அம்சங்களை குண்டலினியானது வெளிச்சத்திற்கு கொண்டு வரும்.
சக்கரங்கள் மற்றும் நாடிகளின் நுட்பமான அமைப்பு நம் ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரியாக இருந்தாலும், ஒவ்வொரு நபருக்கும் அவரவர் தனிப்பட்ட அனுபவமும் ஆன்மீக பாதையும் உள்ளது - அந்த பாதையை சுய-கண்டுபிடிப்பு பயணமாக பின்பற்றவும்.

உங்கள் தியானத்தின் முடிவில், உங்கள் கையை உங்கள் தலைக்கு மேலே சில சென்டிமீட்டர்கள் வைத்து, நீங்கள் குளிர்ச்சியான அல்லது சூடான காற்றை உணர்கிறீர்களா என்பதைப் பார்க்கவும்.
நீங்கள் நன்றாக பயிற்சி செய்த பின், நாள் முழுவதும் உங்கள் கவனத்தை உங்கள் சஹஸ்ரார சக்கரத்தில் வைத்திருக்கலாம்.
குண்டலினியை எழுப்பும் சக்தி ஸ்ரீ மாதாஜியிடமிருந்து வெளிப்படுகிறது, எனவே நீங்கள் தியானம் செய்யும் போது ஸ்ரீ மாதாஜியின் படத்தை உங்கள் முன் வைப்பது உங்கள் குண்டலினி விழிப்புணர்வை வலுப்படுத்தவும் உங்கள் தியானத்தை ஆழப்படுத்தவும் உதவும்.
நீங்கள் விரும்பினால், இந்த இணைப்பின் கீழ் படத்தை பதிவிறக்கம் செய்து அச்சிடலாம்.

பஞ்சபூதங்களைப் பயன்படுத்துவது தியானத்திற்கு உதவுகிறது: நெருப்பு மற்றும் ஒளி தத்துவத்திற்கு நீங்கள் ஸ்ரீ மாதாஜியின் படத்தின் முன் ஒரு மெழுகுவர்த்தியை வைக்கலாம்.
தூபத்தின் வாசனை பூமி தத்துவத்தைக் குறிக்கிறது. சமநிலையான மற்றும் அமைதியான இசை (கிழக்கு மற்றும் மேற்கத்திய பாரம்பரிய இசையின் பெரும்பாலான வடிவங்கள்) நீங்கள் அமைதியாக இருக்க உதவும், ஆனால் கவனத்துடன் சிறிது நேரம் அமைதியாக இருக்கவும்.

தியானத்தில் நீங்கள் எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலையில் இருக்கிறீர்கள்.
எண்ணங்களற்ற விழிப்புணர்வில் நீங்கள் வளர ஆரம்பிக்கிறீர்கள்.
அது தான் நாம் அடைய வேண்டிய நிலை.

எந்தவொரு வாழ்க்கை செயல்முறையையும் போலவே, நீங்கள் சஹஜ யோகா பயிற்சி செய்யும் போதும் உங்கள் தியான அனுபவம் அதன் இயல்பான போக்கை எடுக்கும்.
நாங்கள் இங்கு விவரித்துள்ள வழக்கம், அந்தச் செயல்முறை நடப்பதற்கான அமைப்பை வழங்கும்.
வழக்கமான தியானம் உங்கள் குண்டலினியை வலுப்படுத்தவும், உங்கள் தியான நிலையை ஆழப்படுத்தவும், உங்கள் உள்ளத்தின் மகிழ்ச்சியை அனுபவிக்கவும் உதவும்.

நீங்கள் காலையிலும் மாலையிலும் தியானம் செய்ய நேரம் ஒதுக்கலாம்.
ஒரு சில வாரங்களுக்குப் பிறகு, நீங்கள் அதன் விளைவுகளையும் நன்மைகளையும் உணர வேண்டும்.
நீங்கள் எவ்வளவு நேரம் தியானம் செய்ய வேண்டும் என்பதில் தெளிவான விதி இல்லை - சில பயிற்சியாளர்கள் 10 நிமிடங்கள் தியானம் செய்கிறார்கள், மற்றவர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேல் தியானம் செய்கிறார்கள், இது ஒரு நாளுக்கும் மற்றொரு நாளுக்கும் கூட வித்தியாசமாக இருக்கலாம்.
ஆனால் நீங்கள் தியான நிலையை அடைவது தான் முக்கியம். துவக்கத்தில் குண்டலினி உங்கள் நுட்பமான அமைப்பை வலுப்படுத்தவும், தியான நிலையை நிலைநிறுத்தவும் அனுமதிக்க குறைந்தபட்சம் 10-15 நிமிடங்கள் பரிந்துரைக்கிறோம்.

தினசரி தியானத்தில் ஈடுபட, தியானம் மற்றும் சமநிலை வழிகாட்டி தாளைப் பயன்படுத்தலாம்.

உங்கள் ஆத்ம விழிப்புணர்வைப் பெறுவது ஆன்மீகப் பயணத்தின் முதல் படியாகும், மேலும் ஒவ்வொரு தியானமும் ஒரு படியாகும் - உங்கள் சுய-கண்டுபிடிப்புப் பாதையில் நீங்கள் செல்வதை நாங்கள் விரும்புகிறோம்.