ஆத்மா
நமது சாஸ்வதமான சுயம்
மனித கருவின் வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில், ஆத்மா (நமது அழிவற்ற ஆத்மா என்று பொருள்படும் ஒரு சமஸ்கிருத வார்த்தை) கருவின் இதயத்தில் முதல் முறையாக நுழைகிறது, பின்னர் அது துடிக்கத் தொடங்குகிறது. உயிரியல் ரீதியாக நமது இதயம் கார்டியோஜெனிக் பகுதியில் கருவின் தலைக்கு அருகில் உருவாகிறது, பின்னர் நம் உடல் வளர்ச்சியடையும் போது மார்பு கூட்டிற்குள் தள்ளப்படுகிறது. ஆத்மா நம் வாழ்வில் ஒரு அமைதியான சாட்சியாக இதயத்தில் வாழ்கிறது மற்றும் ஆத்ம விழிப்புணர்வு மூலம் மட்டுமே நம் விழிப்புணர்வுக்குள் வருகிறது. அது நமக்குள் இருக்கும் ஆதிநிலையின் பிரதிபலிப்பு. அது பரிணாம வளர்ச்சியடையாது, மாறாக நமது பரிணாம வளர்ச்சியின் குறிக்கோள், அல்லது மனித விழிப்புணர்வின் பரிணாம வளர்ச்சி, ஆத்ம நிலையை அடைவது என்றும் கூறலாம்.
மேற்கத்திய தத்துவம், தனித்துவம் மற்றும் ஆளுமை அல்லது அகங்காரத்தின் வளர்ச்சியைச் சுற்றி சுழலும் அதே வேளையில், கிழக்கு தத்துவம் கூட்டுத்தன்மையுடன் தொடர்புடையது மற்றும் தனிநபரை நமது கூட்டு இருப்புக்குள் அதாவது எங்கும் வியாபித்துள்ள ஆன்மாவிற்கு உள்நோக்கித் திருப்ப முயற்சிக்கிறது.

பிறக்கும்போது தொப்புள் கொடியை வெட்டுவது, நமது விழிப்புணர்வை நுட்பமான சுஷும்னா நாடியில் உள்ள முழுமையான தெய்வீக விழிப்புணர்விலிருந்து எவ்வாறு பிரிக்கிறது என்பதை ஸ்ரீ மாதாஜி விவரிக்கிறார். நுட்பமற்ற வெளிப்புற அளவில், இந்த பிரிப்பு இணைப்பரிவு (பாராசிம்பதெடிக் ) நரம்பு மண்டலத்தின் மேல் சூரிய பின்னல் (சோலார் பிளெக்ஸஸ்) மற்றும் அலைவு நரம்புக்கு (வேகஸ் நரம்பு) இடையிலான இடைவெளிக்கு ஒத்திருக்கிறது. இந்த நிகழ்வு பண்டைய வேதங்களில் பலவாறு பெயரிடப்பட்டுள்ளது, உதாரணத்திற்கு ஜென் அமைப்பில் வெற்றிடம்(வாய்டு) மற்றும் இந்து மதத்தில் மாயா (மாயை) என்றும் பெயரிடப்பட்டுள்ளது. பிற்காலத்தில், நமது குழந்தைப் பருவத்தில், நமது வரையறுக்கப்பட்ட மனித அடையாளங்களான அகங்காரம் மற்றும் மமகாரம், இடது மற்றும் வலது பரிவு நரம்பு மண்டலங்களின் முனைகளுக்கு தொடர்புடைய மூளையின் இடது மற்றும் வலது அரைக்கோளங்களை உள்ளடக்கிய பலூன் போல ஊதப்படும்போது, அது நமது விழிப்புணர்வை ஒரு தனி நிறுவனமாக முழுமையாகச் சூழ்ந்து, 'நான்' (அஹம்) என்ற உணர்வு தலைமை தாங்குகிறது.
ஆத்ம விழிப்புணர்வு செயல்முறையின் மூலம் குண்டலினி இதயத்திற்கு உயரும் போது அது ஆத்மாவை அறிவொளிவூட்டுகிறது, மேலும் ஆத்மாவின் உள்ளார்ந்த குணமான இருப்பின் தூய்மையான மகிழ்ச்சியை நாம் உணர ஆரம்பிக்கிறோம். குண்டலினி, நமது தலையின் உச்சிக்குழியில் அமைந்துள்ள மிக உயர்ந்த ஆற்றல் மையமான சஹஸ்ரார சக்கரத்திற்கும் மேலாக உயரும் போது நமது தனிப்பட்ட ஆத்மா, எங்கும் வியாபித்திருக்கும் பிரபஞ்ச சக்தியுடன் இணைக்கப்பட்டு, நம்மோடும் மற்றும் பிரபஞ்சத்தில் வியாபித்திருக்கும் சக்தியுடனும் ஒன்றி இருப்பதன் பேரின்பத்தில் திளைக்கிறோம். இந்த மகிழ்ச்சியின் ஒரு சிறிய அறிகுறி கூட (குண்டலினியின் சில இழைகள் நம் தலைக்கு மேலே எழும்பும்போது நாம் உணரக்கூடியது) நமது ஆன்மீக பயணத்தில் வழிகாட்டும் நட்சத்திரமாக செயல்பட முடியும். அந்த மகிழ்ச்சியை நாம் உணர்ந்தவுடன், அதை இழக்க விரும்பமாட்டோம், அதன் பராமரிப்பு மற்றும் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் அணுகுமுறைகள் மற்றும் நடத்தைகளில் இருந்து தானாகவே விலகிவிடுவோம். எனவே, சஹஜ யோகாவில் மிக சில விதிகள் மட்டுமே உள்ளன, கோட்பாடுகள் என்று எதுவும் இல்லை.

இந்தியாவின் புகழ்பெற்ற ஆன்மீக குருக்களில் ஒருவரான ஆதி சங்கராச்சாரியார், "ஆத்ம ஷதகத்தின்" அழகான வசனங்களில், நம் இதயத்தில் நித்திய பேரின்பமாக பிரதிபலிக்கும் கூட்டு உணர்வின் இந்த முழுமையான விழிப்புணர்வை விவரிக்கிறார்.
"மனோபுத்யஹங்கார. சித்தானி ந அஹம்
நான் புத்திசாலித்தனமோ, மனமோ, கவனமோ, அஹங்காரமோ அல்ல
ந சா ஷ்ரோத்ர். ஜிஹ்வே, ந சா க்ரான்ன நேத்ரே
நான் கேட்கும் உறுப்புகளோ, சுவைக்கவோ, முகர்ந்து பார்க்கவோ, பார்க்கும் உறுப்புகளோ அல்ல
ந ச வ்யோம. பூமிர் ந தேஜோ ந வாயு
நான் வானமும் அல்ல, பூமியும் அல்ல, நெருப்பும் அல்ல, காற்றும் அல்ல
சிதானந்த். ரூபஹ்., ஷிவோ.ஹம், ஷிவோ.ஹம்
நான் நித்திய பேரின்பம் மற்றும் விழிப்புணர்வு, நான் சிவன், நான் சிவன்"