உங்கள் திறனை வெளிப்படுத்துதல்
சுய அறிவு மூலம்
ஒரு தனிநபரின் தன்மேம்பாடு பெறுதல் என்பது தன் வாழ்க்கையின் மீது அதிகக் கட்டுப்பாட்டைப் பெறுதல், அதிக வலிமை அல்லது தன் திறன்களின் மீது மேம்பட்ட நம்பிக்கை ஆகியவற்றைப் பெறுதல் என வரையறுக்கப்பட்டால், ஸ்ரீ மாதாஜி உருவாக்கிய முறையானது சுய-மேம்பாட்டிற்கான மிக உயர்ந்த வழிமுறையாகும். தங்களுக்குள் இருக்கும் திறன், ஒருமுறை விழித்தெழுந்தால் அது உண்மையான மாற்றத்தைக் கொண்டுவருகிறது.
பூக்கள் பழங்களாக மாறுவதைப் போல, அது செயல்பட அனுமதிக்கவும்
சஹஜ யோக தியானத்தை நிலையான பயிற்சி செய்வதனால், ஒட்டுமொத்த நல்வாழ்வு, மன அழுத்தம் மற்றும் எதிர்மறை விளைவுகளுக்கு எதிரான உயர் எதிர்ப்புத்திறன் போன்ற நன்மை கிடைப்பது மட்டுமின்றி, பயிற்சியாளர்கள் தங்கள் சொந்த சூட்சும உடலின் (subtle body) - உயிர் நாடிகள் மற்றும் சக்தி மையங்களின் வலையமைப்பு - நிலையை நன்கு புரிந்துகொள்ளவும், தங்களுக்குள் சமநிலையையும் இணக்கத்தையும் மீட்டெடுக்க எளிய நுட்பங்களை படிப்படியாகக் கற்றுக்கொள்ளவும் முடியும்.
ஆத்ம விழிப்புணர்வு சுய அறிவில் தொடங்குகிறது என்பதை ஸ்ரீ மாதாஜி வலியுறுத்தினார். சில வாரங்களுக்குள், சஹஜ யோகா தியானத்தின் பயிற்சியாளர்கள் நுண்ணதிர்வு விழிப்புணர்வு எனப்படும் யதார்த்தத்தைப் பற்றிய புதிய மற்றும் நுட்பமான விழிப்புணர்வை வளர்த்துக் கொள்கிறார்கள், இது அவர்களின் சுற்றுப்புறங்களில் உள்ள சக்தியின் தரத்தை மதிப்பிடும் திறனையும், அத்துடன் அவர்களின் சொந்த உள் நிலையை கண்டறியும் திறனையும் அளிக்கிறது. பஞ்சபூதங்களைப் (காற்று, நீர், நெருப்பு, பூமி,ஆகாயம்) பயன்படுத்தி பலவிதமான நுட்பங்கள் மற்றும் சிகிச்சைகள் மூலம் ஆற்றல் அளவுகளில் அதிகப்படியான அல்லது குறைபாட்டை சரிசெய்யலாம். இவை அனைத்தும் கைகள் மற்றும் உடலின் சில பகுதிகளில் உணரப்படும் உறுதியான நுண்ணணர்வுகளின் அடிப்படையில் அறியலாம்.
மிக முக்கியமாக, எண்ணங்களற்ற விழிப்புணர்வு மற்றும் உள் அமைதியின் நிலை என வரையறுக்கப்படும் உண்மையான தியானத்தின் அனுபவத்தை அடைவது, அதிகப்படியான சிந்தனை அல்லது கவலையின் விளைவாக அடிக்கடி உருவாக்கப்பட்ட சமநிலையின்மைகளை சரிசெய்ய உதவுகிறது. இது சுய கட்டுப்பாடு, கவனம் செலுத்தும் திறன் மற்றும் சுயமரியாதையை அதிகரிக்கிறது.
மிகவும் விரிவான பயிற்சியுடன், நுட்பமான நுண்ணதிர்வுகளைப் பற்றிய விழிப்புணர்வு முடிவெடுக்கும் கருவியாக மாறும், மேலும் ஒரு சூழ்நிலையின் அனைத்து அம்சங்களையும் மிகவும் துல்லியமாக மதிப்பிடுவதற்கான பயிற்சியாளர்களின் திறனை அதிகரிக்கும். தியானம் மற்றும் அதனுடன் இணைந்த உதவிக்குறிப்புகள் மற்றும் நுட்பங்கள் படிப்படியான சுய-மாற்றம் மற்றும் ஒருவரின் சுற்றுச்சூழலை சாதகமாக்கும் திறனைக் கொண்டு வர உதவும்.
சஹஜ யோகா தியானத்தின் பயிற்சியின் மூலம் உண்மையான சுய-அதிகாரம் அடையப்படுகிறது, இது தானாகவே நம் இதயத்தில் வசிக்கும் நித்திய ஆத்மாவை எங்கும் நிறை பிரபஞ்ச சக்தியின் மிக உயர்ந்த ஆதாரத்துடன் நம்மை இணைக்கிறது.