ஒரு அறிவொளி கல்வி

ஒரு அறிவொளி கல்வி

ஆன்மீக நல்வாழ்வை பேணுதல்

அறிவுசார்ந்த கல்வி மற்றும் உணர்ச்சிசார்ந்த வளர்ச்சியை பேணி காப்பதுடன், குழந்தைகளின் ஆன்மீக நல்வாழ்வையும் கல்வி உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

முன்பை விட இப்போது குழந்தைகளுக்கு சமச்சீர் கல்வி தேவைப்படுகிறது. இந்த கல்வி அறிவுசார்ந்த கல்வி மற்றும் உணர்ச்சிசார்ந்த வளர்ச்சியை பேணுவது மட்டுமல்லாமல், அவர்களின் ஆன்மீக நல்வாழ்வையும் நிவர்த்தி செய்ய வேண்டும். குழந்தைகள் தங்கள் உள்ளார்ந்த திறன்களையும் வலிமையையும் புரிந்து கொண்டால், அவர்களால் எந்தச் சூழலிலும் வளரமுடியும். உன்னிப்பாக கவனம் செலுத்துதல் மற்றும் உலகளாவிய கண்ணோட்டம் ஆகியவை அறிவொளி பெற்ற கல்விக்கான மற்ற இரண்டு திறவுகோல்கள் ஆகும்.

ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்விக்கு உறுதியான அடித்தளத்தை உருவாக்குவதற்கு, ஸ்ரீ மாதாஜி அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களால் பகிரப்பட்ட ஒரு கூட்டு செயல்முறையாக இருக்க வேண்டும் என்று நம்பினார். இயற்கை சூழலும் இதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தைகள் தாவரங்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி அறிந்துகொள்வதால், அவர்கள் பூமித்தாய் மற்றும் அதன் விலைமதிப்பற்ற வளங்கள் மீது மரியாதையை பெறுகிறார்கள்.

"ஒரு சிறந்த தன்மையை உருவாக்க முடியாவிட்டால் இலக்கியக் கல்விக்கு எந்த ஒரு மதிப்பும் இல்லை."
மகாத்மா காந்தி

சுயமரியாதையும் கண்ணியமும் உருவாகச் செய்வதற்காக, ஸ்ரீ மாதாஜி ஒழுக்கத்திற்கு மிகுந்த மதிப்பளித்தார் — அன்பும் மரியாதையும் அடிப்படையாகக் கொண்ட ஒழுக்கம். “நமது குழந்தைகள் நம்மைவிட மிகச் சிறந்தவர்களாக வளர வேண்டும் என்பதை உறுதி செய்வது நமது கடமை. நம்மை விடச் சிறந்தவர்களாக,” என்று ஸ்ரீ மாதாஜி கூறினார். “அவர்கள்தான் உலகத்தை காக்க வேண்டும்.”

தனது நோக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, ஸ்ரீ மாதாஜி சஹஜ யோகாவை மையமாகக் கொண்ட ஒரு கல்வி முறையை உருவாக்கினார். சவாலான கல்வித் திட்டத்துடன் கூடுதலாக, மாணவர்கள் தொடர்ந்து தியானம் செய்கிறார்கள்.இது அவர்களின் கவனத்தையும் ஒருமுகப்படுத்தும் திறனையும் மேம்படுத்துகிறது. மேலும், சுயநம்பிக்கை மற்றும் சுயபுரிதலை அதிகரிக்கிறது. உலகெங்கிலும் உள்ள இளைஞர்கள் இந்தியா, இத்தாலி, கனடா, ஆஸ்திரியா, அமெரிக்கா, செக் குடியரசு, ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள ஸ்ரீ மாதாஜியின் பள்ளிகளில் வளர்ந்து, ஆழமான உறவுகளை உருவாக்கி வருகின்றனர்.

தரம்சாலாவில் உள்ள எங்கள் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளை நான் பார்த்திருக்கிறேன். மிகுந்த தன்னம்பிக்கையுடையவர்கள் மற்றும் மிகவும் பணிவானவர்கள். நான் அவர்களிடம், ‘நீங்கள் என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டேன், அவர்கள், ‘… நாங்கள் மாலையிலும் காலையிலும் தியானம் செய்கிறோம், அது எங்களுக்கு மிகவும் உதவுகிறது’ என்றார்கள்.

குழந்தைகளைப் பற்றி, நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ரவீந்திரநாத் தாகூர் கூறியதாவது , "அவர்கள் உயிரோட்டமானவர்கள் - தங்களைச் சுற்றி பழக்கவழக்கங்களை உருவாக்கிக் கொண்ட பெரியவர்களை விட அதிக உயிரோட்டமானவர்கள் .எனவே, அவர்களின் மன ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் அவர்களின் பாடங்களுக்கு வெறும் பள்ளிகள் மட்டுமே இருக்கக்கூடாது, ஆனால் தனிப்பட்ட அன்பை வழிநடத்தும் ஒரு உலகம் முற்றிலும் அவசியம் " என்று குறிப்பிட்டார்.

இன்றைய குழந்தைகள் நாளைய எதிர்காலம், நல்ல கல்வியில் முதலீடு செய்வது சிறந்த உலகில் முதலீடு செய்வதற்கு ஒத்ததாகும். இருப்பினும், பள்ளிகளில் குழந்தைகளின் சமூக மற்றும் உளவியல் நல்வாழ்வு பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது . குறைந்தபட்சம் ஐந்தில் ஒரு குழந்தை மற்றும் இளம் பருவத்தினர் மனநலப் பிரச்சனையை எந்த வருடத்திலும் வெளிப்படுத்தலாம் மற்றும் அமெரிக்காவில், பத்தில் ஒரு குழந்தை மற்றும் இளம் பருவத்தினர் சீர்கேடு விளைவிக்கும் அளவிற்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளியிலோ, பணியிடத்திலோ அல்லது வீட்டிலோ நம் வாழ்வில் ஏற்படும் வழக்கமான ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் மன அழுத்தத்தின் விளைவுகளைத் தடுப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் நிரூபிக்கப்பட்ட ஆதார அடிப்படையிலான உயிர்-ஆன்மீக தலையீடு என்பதை, தியானம் பற்றிய அறிவியல் ஆராய்ச்சி [1] வெளிப்படுத்துகிறது. சஹஜ யோகா தியானம் (SYM) தன்னிச்சையானது, எளிமையானது மற்றும் சிரமமின்றி இருப்பதால் அது தனித்துவமானது என்பதைக் காட்டுகிறது. SYM தியானத்தின் அனைத்துப் பண்புகளும் குழந்தைகள் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடையே அதை ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும், சுவாரஸ்யமாகவும், பிரபலமாகவும் ஆக்கியுள்ளது. ஒரு பாடத்திட்டத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மற்றும் தரத்துடன் நிர்வகித்தல் மற்றும் வழங்குதல் ஆகிய அதிக சுமைகளை கையாளும் ஆசிரியர்களுக்கு, பணி-வாழ்க்கை சமநிலை அணுகுமுறையை வழங்குவதில் இது பயனுள்ளதாக இருக்கிறது.

“இன்டர் பீஸ் ப்ராஜெக்ட்” (www.innerpeaceday.org) மற்றும் “தியான்தாரா” [2] (இந்தியா) போன்ற பல முயற்சிகள், சஹஜ யோகா தியானத்தின் மூலம் பள்ளிகளில் குழந்தைகளின் முழுமையான ஆரோக்கியத்தையும் வாழ்க்கையையும் மேம்படுத்தி வருகின்றன. இவை சாதாரண பள்ளிகளில் சஹஜ யோகா தியானத்தை கொண்டு வந்து, குழந்தைகளுக்கு அதன் நன்மைகளை அளித்து வருகின்றன.


[1] https://researchingmeditation.org

[2] Dhyaandhara Study at LMP Intercollege Lucknow India

SHARE PAGE