கூட்டு ஆன்மீக விழிப்புணர்வு
உலகளாவிய அறிவொளியை நோக்கி ஒரு புரட்சிகர மாற்றம்
ஸ்ரீ மாதாஜி, அனைத்து மதங்கள் மீதும் ஆழ்ந்த மரியாதை கொண்ட கிறிஸ்தவ பெற்றோருக்கு பிறந்தார். அவருடைய தந்தை, பிரசாத் கே. சால்வே, இறையியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார். அவர் தனது குழந்தைகளை அனைத்து முக்கிய மதங்களின் கோட்பாடுகளையும் புரிந்துகொள்ள ஊக்குவித்தார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலகை வாட்டி வந்த மத அடிப்படையிலான மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒட்டுமொத்த ஆன்மீக அறிவொளியின் மூலமே மனிதகுலத்தின் இறுதி ஒற்றுமை சாத்தியமாகும் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.
ஸ்ரீ மாதாஜியின் பெற்றோர் மகாத்மா காந்தியின் அமைதியான ஒத்துழையாமைத் தத்துவத்தால் ஈர்க்கப்பட்டு, அவரது 'வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்' தீவிரமாகப் பங்கேற்றனர் [1]. காந்தியின் ஆசிரமத்தில் வாழ்ந்த ஒரு இளம் பெண்ணாக, ஸ்ரீ மாதாஜி இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோருடன் பழகினார்; இவர்கள் அனைவரும் தேசிய சுதந்திரம் மற்றும் விடுதலை என்ற பொதுவான இலக்கால் ஒன்றுபட்டிருந்தனர். பின்னர், இந்தியாவின் பிரிவினையின் போது, நாடு மதவாத வன்முறையால் சிதைக்கப்பட்டிருந்த வேளையில், ஸ்ரீ மாதாஜியும் அவரது குடும்பத்தினரும், மதம் பாராமல், மோதலில் இருந்து தப்பி வந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர்.
இந்தத் தீவிரமான மற்றும் கடினமான காலங்களில் வாழ்ந்த ஸ்ரீ மாதாஜி, அரசியல் சுதந்திரம் ஒன்றே இறுதித் தீர்வு அல்ல என்பதைத் தாமே உணர்ந்துகொண்டார். மனிதகுலத்தின் ஆன்மீக மாற்றத்திற்குப் பங்களிப்பதே தனது வாழ்க்கையின் உண்மையான நோக்கம் என்று அவர் தீர்மானித்தார். இருப்பினும், அவர் சரியான நேரத்திற்காகக் காத்திருந்தார். சி.பி.ஸ்ரீவஸ்தவாவை திருமணம் செய்து கொண்ட பிறகு, தங்கள் குழந்தைகள் வளர்ந்து வாழ்க்கையில் நிலைபெற்ற பிறகுதான் தனது உண்மையான பணியைத் தொடங்குவேன் என்று ஸ்ரீ மாதாஜி அவரிடம் கூறினார்.
1970 ஆம் ஆண்டில் தான், ஸ்ரீ மாதாஜி பூமியில் தனது உண்மையான பணியைத் தொடங்குவதற்கான நேரம் வந்துவிட்ட்டதை இறுதியாக உணர்ந்தார். மனிதர்களையும் அவர்களின் பிரச்சினைகளையும் ஏற்கனவே ஆய்வு செய்திருந்த அவர், உண்மையான பதில்கள் அவர்களின் தூண்டப்படுவதற்கு காத்திருக்கும் ஆன்மீக விழிப்புணர்வில் உள்ளது என்பதை அறிந்திருந்தார். உண்மையான தீர்க்கதரிசிகளின் போதனைகளை அடிப்படையாகக் கொண்ட மதங்கள் மனித உணர்வில் இந்த ஆன்மீக தூண்டுதலை வழங்க முடியாது என்பதை அவர் அறிந்திருந்தார். ஒரு மாலை நேரத்தில், உண்மையான ஆன்மீகத்தின் மீது பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களிடமிருந்து பணத்தைக் கொள்ளையடிக்கும் இந்தியாவில் உள்ள போலி குருமார்களால் வெறுப்படைந்த அவர் இனி காத்திருக்க வேண்டாம் என்று முடிவு செய்தார். ஒரு தனிமையான கடற்கரையில், 1970 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி அதிகாலையில், ஒரு அமாவாசை இரவின் தொடக்கத்தில், தியானம் செய்து கொண்டிருந்தபோது, தனது சொந்த நுட்பமான உயிரினத்தின் படைப்பாகிய ஆதி சக்தியின் விழிப்புணர்வை அவர் உணர்ந்தார். இந்த ஆழ்ந்த ஆன்மீக அனுபவம், உண்மையைத் தேடும் மனிதர்களிடம் அழிவற்ற ஆத்ம விழிப்புணர்வை எவ்வாறு தூண்டுவது என்பது குறித்து அவர் வாழ்க்கையில் தேடிக்கொண்டிருந்த அனைத்து பதில்களையும் அவருக்கு கொடுத்தது. இந்த வரலாற்று நிகழ்வு அவரது வாழ்க்கையில் ஒரு முக்கிய தருணமாக, முழுமையான ஆன்மீக விழிப்புணர்வின் தனித்துவமான கண்டுபிடிப்பாக அமைந்தது. பின்னர் அதில் ஒரு நுட்பத்தை கண்டுபிடித்து அதை அவர் சஹஜ யோகா என்று அழைத்தார். இதன் பொருள் ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் போது அவன் அறியாத உள்ளிருக்கும் தெய்வீக அழிவற்ற சக்தியுடன் ஒருங்கிணைவதே ஆகும்.
சஹஜ யோகா என்பது ஒரு எளிய மற்றும் சுலபமான தியான முறையாகும். இது ஒவ்வொரு மனிதரிடமும் இருக்கும் நுட்பமான மற்றும் சக்திவாய்ந்த ஆன்மீக சக்தியை எழுப்புவது ஆகும். உண்மையின் இந்த தருணம் ஆத்ம விழிப்புணர்வு என்று அறியப்படுகிறது. இதுவே பழங்காலத்திலிருந்தே உலகம் முழுவதும் உள்ள மத ஆன்மீகவாதிகளின் கிடைப்பதற்கறிய இலக்காக இருந்தது.
வாழ்நாள் முழுவதும் தவம் மற்றும் தியாகத்தின் மூலம் மட்டுமே அடையக்கூடிய தொலைதூர இலக்கிற்கு மாறாக, ஆத்ம விழிப்புணர்வு என்பது இங்கேயே இப்போதே அடையக்கூடிய ஒன்று என்று ஸ்ரீ மாதாஜி அறிவித்தார். அவரது பொது நிகழ்ச்சிகளில், அவர் எப்போதும் "நீங்கள் உங்கள் சொந்த எஜமானர்" என்று கூறினார், நாம் ஒவ்வொருவரும் நம்முடைய சொந்த ஆசிரியராக இருக்க வேண்டும், உண்மையைப் பற்றிய நமது சொந்த அனுபவத்தை நம்பியிருக்க வேண்டும், மேலும் நம்மை நமது அறிவொளிக்கு வழிநடத்த ஒரு இடைத்தரகரை சார்ந்து இருக்கக்கூடாது. மேலும், ஸ்ரீ மாதாஜி எப்பொழுதும் தான் சொன்னது மக்கள் தங்களைத் தாங்களே சோதித்துக் கொள்ள வேண்டும் என்ற கருதுகோள் என்றும், குருட்டு நம்பிக்கை ஒருவரை எங்கும் அழைத்துச் செல்லாது என்றும் தெளிவுபடுத்தினார்.
உண்மையான மதம் என்பது கோட்பாடு மற்றும் படிநிலையை அடிப்படையாகக் கொண்டது அல்ல, மாறாக, ஆன்மாவாக சுயத்தைப் பற்றிய முழுமையான அறிவை அடிப்படையாகக் கொண்டது என்று ஸ்ரீ மாதாஜி நம்பினார். அவர் கூறியது போல், "அனைத்து மதங்களும் ஒரே வாழ்க்கை மரத்திலிருந்து(ஜீவ விருட்சத்திலிருந்து) தோன்றின, அதுவே ஆன்மீகம்... மதம் உங்களுக்கு அமைதி, ஆனந்தம் மற்றும் சந்தோஷத்தைத் தருவதற்காகவே உள்ளது... (அவற்றுக்கு இடையே)எந்த வித்தியாசமும் இல்லை - ஆனால் நீங்கள் உங்களையே அறியாத போது, மதத்தைப் பற்றி நீங்கள் எப்படி அறிவீர்கள்? எனவே, முதலில், நீங்கள் உங்களையே அறிந்து கொள்வது முக்கியம். உங்களை ஒரு ஆன்மீகவாதியாக நீங்கள் அங்கீகரிக்கும் போது, "..."...நீங்கள் எந்த மதத்தை பின்பற்றுகிறீர்களோ அதை புரிந்துகொள்வீர்கள்...(மற்றும்)...இந்த தீர்க்கதரிசிகள் மற்றும் குருக்களின் மகத்துவத்தையும் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்...".
ஒரு குரு அல்லது ஆசிரியரை விட, ஸ்ரீ மாதாஜி ஒரு 'ஆன்மீக தாய்' என்று விவரிக்கப்படலாம், கருணை மற்றும் அன்பால் உந்தப்பட்டு, அனைத்து மனிதகுலத்தின் நலன் மற்றும் பரிணாம வளர்ச்சியில் ஆர்வத்துடன் அக்கறை கொண்டவர். அவரது தொலைநோக்கு மற்றும் அவரது அயராத முயற்சியின் காரணமாக, சஹஜ யோகா நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் நிறுவப்பட்டுள்ளது மற்றும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்க்கையில் சமநிலையையும் திருப்தியையும் அடைந்துள்ளனர், சிலர் தீவிர மன மற்றும் உடல் குறைபாடுகளை ஆத்ம விழிப்புணர்வு அனுபவம் மற்றும் முறையான சகஜ யோகா தியான பயிற்சியின் மூலம் வென்றிருக்கிறார்கள்.