ஸ்ரீ மாதாஜி நிர்மலா தேவி
மனிதநேயத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை
ஸ்ரீ மாதாஜி நிர்மலா தேவி அமைதியாக பலரது வாழ்க்கையை மாற்றியமைத்தார். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் சர்வதேச அளவில் பயணம் செய்து, இனம், மதம் அல்லது சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் இலவச பொதுச் சொற்பொழிவுகளையும், ஆத்ம விழிப்புணர்வு அனுபவத்தையும் வழங்கினார். இந்த மதிப்புமிக்க அனுபவத்தை பிறருக்கும் பகிர்ந்துக்கொள்ளும் திறனை மக்களுக்கு அளித்தது மட்டுமின்றி, அதைத் தக்கவைத்துக் கொள்வதற்குத் தேவையான தியான நுட்பத்தையும் அவர்களுக்குக் கற்பித்தார்; இது சஹஜ யோகா என்று அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு உள்ளார்ந்த ஆன்மீக சக்தி உள்ளது என்றும், அது தன்னிச்சையாக விழித்துக்கொள்ள முடியும் என்றும் ஸ்ரீ மாதாஜி வலியுறுத்தினார். ஆத்ம விழிப்புணர்வு என்று விவரிக்கப்படும் இந்த விழிப்புணர்வை விலைகொடுத்து வாங்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார். ஆத்ம விழிப்புணர்வு அனுபவத்திற்கோ அல்லது சஹஜ யோக தியானப் பயிற்சிக்கோ ஒருபோதும் பணம் வசூலிக்கப்பட்டதில்லை, இனியும் வசூலிக்கப்படாது.
சஹஜ யோக தியானத்தைப் பயிற்சி செய்வதனால் வரும் உள் சமநிலையும் மன அழுத்தக் குறைப்பும் உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு ஏற்கனவே பயனளித்துள்ளது. நமது உள்ளார்ந்த ஆன்மீக ஆற்றலை விரைவாகவும் எளிதாகவும் செயல்படுத்தும் திறனும், அதன் நன்மைகளை அனுபவிக்கும் திறனும், சஹஜ யோகாவை மற்ற தியான முறைகளிலிருந்து வேறுபடுத்துகிறது. பயிற்சியின் மூலம், தனிநபர்கள் தங்கள் சொந்த ஆற்றலை நெறிப்படுத்தி, மன, உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்து, நல்வாழ்வு, அமைதி மற்றும் நிறைவான நிலையை அடைய முடிகிறது.
தற்போது 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் நிறுவப்பட்டுள்ள சஹஜ யோக மையங்களைத்தவிர, ஸ்ரீ மாதாஜி ஆதரவற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக ஒரு அரசு சாரா அமைப்பையும், முழுமையான பாடத்திட்டத்தைக் கற்பிக்கும் பல சர்வதேசப் பள்ளிகளையும், சஹஜ யோக தியான நுட்பங்கள் மூலம் சிகிச்சை வழங்கும் சுகாதார மருத்துவமனைகளையும், நடனம், இசை மற்றும் ஓவியம் போன்ற பாரம்பரியக் கலைத் திறன்களைப் புத்துயிர் பெறச் செய்வதற்கான ஒரு கலைக் கூடத்தையும் நிறுவினார்.
தனிச் சிறப்புகள்
ஸ்ரீ மாதாஜி
மிகச் சிறு வயதிலிருந்தே ஸ்ரீ மாதாஜி தன்னைச் சுற்றியுள்ள உல விஷயங்களில் ஈடுபாடு கொண்டிருந்தார். அவரது பெற்றோர் இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தபோது, ஸ்ரீ மாதாஜி சிறு வயதிலேயே வீட்டுப் பொறுப்பை ஏற்றார். சிறு வயதிலேயே அவர் அடிக்கடி மகாத்மா காந்தியின் ஆசிரமத்திற்கு சென்று வந்தார், அப்போது காந்திஜி ஸ்ரீ மாதாஜியை ஒரு ஆன்மீக மேதையாக அடையாளம் கண்டுகொண்டார்.
மேலும் அறியசமூக மாற்றம்
…ஆன்மீக ஜீவன்களாகத் தங்களின் உண்மையான உள்ளார்ந்த ஆற்றலைப் பற்றிய அறியாமையிலிருந்தே அனைத்து மனிதப் பிரச்சனைகளும் எழுகின்றன என்பதையும், அந்த ஆற்றலை ஆத்ம விழிப்புணர்வின் மூலம் எளிதில் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதையும் அவர் உணர்ந்தார். சமூக மாற்றத்திற்குத் திறவுகோலாக விளங்கும் இந்த உள் மாற்றம், ஸ்ரீ மாதாஜியால் தொடங்கப்பட்ட அனைத்து உலகளாவிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் அடித்தளமாக அமைந்தது.
மேலும் அறியஅவரது பொது நிகழ்ச்சிகள்
வருகைதரத் தகுதியற்ற அளவிற்கு மிகச் சிறியதோ அல்லது மிகத் தொலைவிலோ எந்த இடமும் இல்லை. இமயமலையின் அடிவாரத்திலிருந்து ஆஸ்திரேலியாவின் உட்பகுதி வரை; லண்டனிலிருந்து இஸ்தான்புல் வழியாக லாஸ் ஏஞ்சல்ஸ் வரை, ஸ்ரீ மாதாஜி ஆத்ம விழிப்புணர்வு அனுபவத்தை விரும்பிய அனைவருடனும் பகிர்ந்துகொள்வதற்காகத் தனது நேரத்தை அர்ப்பணித்தார்.
மேலும் அறிய